ஆராதிப்போம் ஆண்டவரை ஆவியோடும்
aaraadhippom aandavarai aaviyodum
ஆராதிப்போம் ஆண்டவரை ஆவியோடும் உண்மையோடும் மாறாத ஆனந்தம் குன்றாத பேரின்பம் இயேசுவில் என்றும் உண்டு – அல்லேலூயா
நேசரண்டை வாருங்கள் நேசத்தை ருசியுங்கள் ஆவலாய் அழைக்கிறார் இதோ
1. ஆகாமியக் கூடாரம் வேண்டாம் ஆலய வாசற்படியிலே ஆனந்தம் பாடி நேசரைத் தேடி ஆண்டவர் பாதம் பணிவோம் – ஆராதிப்போம்
2. ஆலோசனைக் கர்த்தர் அவரே ஆலோசனை தந்திடுவாரே பாதையைக் காட்டி கரம்பிடித்து நேர்வழி நடத்திடுவார் – ஆராதிப்போம்
3. ஆட்டுக்குட்டி திருஇரத்தமே பாவமறக் கழுவிடுமே சாபங்கள் போக்கி நோய் நீக்கி விடுதலை தந்திடுமே – ஆராதிப்போம்