ஆராதிப்பேன் நான் ஆனந்தம்கொண்டேன்
aaraadhippen naan aanandhamgonden
ஆராதிப்பேன் நான் ஆனந்தங்கொண்டேன் இயேசுவே என் வாழ்வில் எல்லாம் ஆனாரே ஆராதிப்பேன் நான் துதி பாடுவேன் இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே
என் இருதயம் இருள் சுழ்ந்ததே எனக்கோர்; ஒத்தாசை தேடியலைந்தேன் (2) கிருபா பலியாய் இயேசுவைக் கண்டேன் (1) காலமெல்லாம் நான் கீதம் பாடுவேன் (1)
அன்பின் நிழலிலே என்னை அணைத்தார்; அவரின் சந்நிதி ஆனந்தமே (2) அருளின் ஒளியில் பரவசமானேன் (1) ஆயுளெல்லாம் கர்;த்தர்; துதி பாடுவேன் (1)
சிந்தினார்; உதிரம் சிந்தை மாற்றினார்; உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன் (2) அந்திப நாளில் இயேசுவோடு வாழ்வேன் (1) அனுதினம் பாடுவேன் சங்கீதமே (1)