ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
aaraadhippen aaraadhippen
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் பரிசுத்த கரங்களை உயர்த்தி புதிய பாடல் பாடி ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
பாவத்திலிருந்து மீட்டெடுத்தவரை பரிசுத்த வாழ்வு எனக்கு தந்தவரை
பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை ஆவியின் வரங்களை எனக்கு ஈந்தவரை
வியாதியிலிருந்து விடுதலை தந்தவரை விடுதலை ஆவியை எனக்கு தந்தவரை
அதிசயமாக நடத்தி வந்தவரை ஆனந்தமாக பாடி துதிப்பேன்
நன்மைகள் செய்த ஆண்டவரவரை நன்றியோடே போற்றித் துதிப்பேன்