ஆராதிக்கிறேன் கும்பிட்டாராதிக்கிறேன்
aaraadhikkiren kumbittaaraadhikkiren
ஆராதிக்கிறேன் கும்பிட்டாராதிக்கிறேன் ஆராதனையில் புது கானம் பாடியே மா உன்னதராம் இரட்சகர் நாமம் வாழ்த்திப் பாடி உம் மலரடியில் தாழ்ந்து வீழ்ந்து வணங்குவேன் ஆத்மநாதனே உம்மில் சேர்வேனே என் மனதில் நீர் என்றும் தங்குமே
1. இயேசு நாதா ஒரு சிசுவாய் என்னை உந்தன் முன்பில் மாற்றிடுமே எந்தன் பாவம் யாவும் போக்கினதால் துக்கபாரம் யாவும் நீக்கினதால் ஆனந்தக் கண்ணீரில் பாடுகிறேன் – ஆராதிக்
2. ஸ்நேக நாதா ஜீவபலியாய் என்றும் உம்மில் நானும் ஜீவித்திட எனது உள்ளம் யாவும் சமர்ப்பிக்கின்றேன் மகனாக என்னையும் மாற்றிடுமே ஆதிநாதனே அதிசயமே நீர் எந்தன் மகிமை மேசியாவே- ஆராதிக்