ஆராதிக்கக் கூடினோம்
aaraadhikkak koodinom
ஆராதிக்கக் கூடினோம் ஆர்ப்பரித்து பாடுவோம் இயேசு நம்மில் ஜீவிக்கிறார் - ஆர்ப்பரித்து துதிப்போம் சுவிசேஷம் கூறுவோம் உடன் பங்காளிகளாய்
தடைகளை தகர்க்கும் ராஜாதி ராஜன் நம் முன்னே செல்கின்றாரே -2 எரிகோவும் யோர்தானும் முன் நிற்க முடியாதே செங்கடலும் பிளந்து பாதை விடுமே சத்துருவின் சேனையை அழித்திடுமே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
ஏழு மடங்காக்கிய கொடிய தீயும் சேதப்படுத்திடாதே -2 தண்ணீரை கடக்கையில் உன்னோடு வருவாரே அக்கினியில் நம்மோடு நடக்கின்றாரே சத்துருவின் அக்கினி அவிந்திடுமே
கெர்ச்சித்து எதிர்க்கின்ற சாத்தானை வெல்ல இயேசு பெலன் ஈவாரே -2 சிங்கம் போல் விழுங்கவே எதிரி வந்தாலுமே இயேசுவின் நாமத்தில் கட்டுவோமே சத்துருவின் ஆட்டமும் அடங்கிடுமே