ஆராதிக்க தெரிந்தெடுக்க
aaraadhikka therindhedukka
ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்க அடிமையாம் எங்கள அழைத்தது நீங்க அத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயா உம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா
கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்கு ராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்கு அவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குது அவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது
காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுது தூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவு கற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருது மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது
எரிகோவை நாங்க சுத்தி சுத்தி வருவோம் தடையாக இருப்பதெல்லாம் துதியாலே இடிப்போம் சேனைக்குள் பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு மதில்களை தாண்டிட தைரியம் உண்டு