ஆராதனைக்குரியவரே அப்பா ஸ்தோத்திரம்
aaraadhanaikkuriyavarae appaa sthothiram
ஆராதனைக்குரியவரே அப்பா ஸ்தோத்திரம் அதிசயமானவரே இயேசு ஸ்தோத்திரம் ஆவியானவரே அபிசேக நாதரே உமக்கே ஸ்தோத்திரம் -
பகலெல்லாம் இரவெல்லாம் அழுகின்றேன் ஐயா - 2 உம் பாதம் விழுந்து கண்ணீரால் நனைந்து உம்மையே நினைக்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன்
உலகெல்லாம் படைத்தவரே பரிசுத்தமானவரே - 2 பாவத்தை களைந்து தூய்மையை அணிந்து . உம்மையே துதிக்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன்
ஆலோசனை தருபவரே அனைத்திலும் பெரியவரே - 2 அனைத்தையும் இழந்து ஆவியில் நிறைந்து உமக்காய் துடிக்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன்
துன்பத்திலும் துயரத்திலும் துணையாய் இருப்பவரே - 2 உலகத்தை மறந்து சிலுவையைச் சுமந்து உம்மையே பார்க்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன்