ஆராதனைக்குரியவரே
aaraadhanaikkuriyavarae
ஆராதனைக்குரியவரே துதிகளுக்கு பாத்திரரே -2 மகிமை மாட்சிமை நிறைந்தவரே தேவாதி தேவனே-2
ஹல்லேலூயா ஹல்லேலூயா (4)
வானமும் பூமியும் படைத்தவரே வார்த்தையினாலே சிருஷ்டித்தவர் -2 இல்லாதவைகளை இருப்பது போல் அழைத்திடும் எந்தன் நேசரே
கேருபீன் சேராபின்கள் நடுவினிலே வாசம் செய்திடும் தூயவரே மூப்பர்கள் வணங்கிடும் பெரியவரே எங்கள் ராஜாவே .
வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் பரிந்து பேசிடும் பரிகாரியாய் வாக்குக்கடங்கா பெருமூச்சோடு வேண்டிடும் எங்கள் இயேசுவே