ஆராதனைக்குகந்தவரே
aaraadhanaikkugandhavarae
ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமைக்கெல்லாம் பாத்திரரே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம் உந்தன் அன்பினால் எங்கள் உள்ளம் நிறைந்து - நன்றி நிறைவால் பொங்கி வழிகின்றேதே
நீதியறியாத எங்களை உந்தன் நீதியாக்கிட - பாவமறியாத இயேசுவை நீர் பாவமாக்கினிரே நீதியின் உணர்வினால் உம்மிடம் நெருங்கிட - நன்மைகள் அடைந்திட திராணியை தந்தீரே
இயேசுவின் நாமம் எங்களுடைய அதிகார பத்திரம் - உரிமையோடே உச்சரிப்போம் உபயோகப்படுத்துவோம் இயேசுவின் நாமத்தில அனைத்தையும் தந்திரே - தந்தை உம் அன்பினை எண்ணியே தொழுகிறோம்
பிதாவே உந்தன் சுதந்தரராய் இயேசுவை வைத்திரே - எங்களை உடன் சுதந்தரராய் அவருடன் இணைத்தீரே எங்களின் சுதந்தரம் அனைத்தையும் அறிந்திட வார்த்தையை நோக்குவோம் வளமுடன் வாழ்வோம்