ஆராதனைக்கு தடையாக இருக்கும்
aaraadhanaikku thadaiyaaga irukkum
தடையாக இருக்கும் அசுத்தமான குணங்களை கண்ணோக்கிப்பாரும் - 2 நீர் பரிசுத்தர் நாங்கள் உம் பிள்ளைகள் உமக்கேற்ற பரிசுத்தம் எங்களுக்கும் தாரும் - 2 உமக்கேற்ற பரிசுத்தம் எங்களுக்கும் தாரும்
ஆராதனை ஆராதனை பரிசுத்த தெய்வமான உங்களுக்குத்தான் ஆராதனை ஆராதனை பாவத்தைப் பாராத சுத்தருக்குத்தான்
1. பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க கூடாத காரியம் என்றதாலே - 2 உம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே பரிசுத்தத்தோடே நான் ஆராதிப்பேன் - 2 - ஆராதனை
2. அழுக்கான வஸ்திரத்தை என்னிலிருந்து எடுத்து அலங்கார வஸ்திரத்தை உடுத்துவியும் - 2 உம்மைப்போல பரிசுத்தர் ஒருவரில்லையே தூதர்களும் அஞ்சிப் போற்றும் ராஜாவே - ஆராதனை