ஆராதனை நாயகரே
aaraadhanai naayagarae
ஆராதனை நாயகரே உம்மை நான் ஆராதிப்பேன் அபிஷேகத்தைத் தருபவரே உம்மை நான் ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
ஆதியும் நீரே அந்தமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் இன்பமும் நீரே இடில்லா நேசரே உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே உம்மை நான் ஆராதிப்பேன்
உண்மையும் நீரே ஊக்கமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன்
ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரே உம்மை நான் ஆராதிப்பேன் ஓங்கிய புயத்தவரே ஒளஷதமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன்