ஆராதனை எங்கள் ஆயுதமாமே
aaraadhanai engal aayudhamaamae
ஆராதனை எங்கள் ஆயுதமாமே ஆராதனை செய்து மேற்கோள்ளுவோமே ஆராதிப்போமே உம்மை ஆராதித்து முன்னேறுவோமே
ஆராதனை செய்வோம் கானானுக்குள் போவோம் ஆராதனை செய்து சுதந்தரிப்போம் ஆராதனை செய்வோம் கானானுக்குள் போவோம் ஆராதனை செய்து சுதந்தரிப்போம்
சமுத்திரம் கூட எங்கள் முன்னே துதியினைக் கேட்டு விலகிடுமே துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே சமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே
பர்வதம் கூட மெழுகைப் போல துதியின் முன்னே உருகிடுமே துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே கன்மலையை நீரூற்றாய் மாற்றிடுவோமே
மனிதர் செய்யும் முறுமுறுப்பெல்லாம் துதியின் சத்தம் உடைத்திடுமே துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே முறுமுறுப்பை துதியினாலே முறியடிப்போமே