ஆராதனை ஆழத்துக்குள் என்னை
aaraadhanai aazhathukkul ennai
ஆராதனை ஆழத்துக்குள் என்னை அழைத்து செல்லும் ஆவியானவரே ஆவியின் கனிகளால் என்னை அனல்மூட்டும் ஆவியானவரே -2 ஆராதனை உமக்கு ஆராதனை (4)
கணுக்கால் அளவு முழங்கால் அளவு இடுப்பளவு போதாதையா - 2 எனது பாத்திரம் நிரம்பச் செய்து-நீச்சல் ஆழத்துக்குள் அழைத்துச் செல்லுங்க -2
ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன் ஆவியானவர் நம்மை இன்று-அபிஷேக ஆழத்துக்குள் அழைத்து செல்கிறார்
அக்கினி அபிஷேகம் எனக்கு தந்து அக்கினியால் என்னை நிரப்பிடுமே வானத்தின் அக்கினி பூமியில் இறங்க அக்கினி ஆழத்துக்குள் அழைத்து செல்லுங்க