ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
aanigal paayndha karangalai virithe
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயேசுன்னை அழைக்கிறாரே
பார்! திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் - ஆணிகள்
மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதனண்டை சரண்புகுவாய் இத்தருணம் - ஆணிகள்
கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் - ஆணிகள்
பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே மறுரூப நாளின் அச்சாரமதுவே மகிமையும் அடைந்திடுவாய் - ஆணிகள்
இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரே உன் நாயகரே - ஆணிகள்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F C Gm C A Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm