ஆணி முகத்தை கண்டேனே
aani mugathai kandenae
1. ஆணி முகத்தை கண்டேனே நான் மகிழ் கொள் உள்ளமே இரட்சகா உம்மை நம்புவேன் இரட்சண்ய மூர்த்தியே
2. சர்வ சக்ராதிபதி இராஜாதி இராஜாவே நேர் பாதை காட்டும் தீபமே நீதியின் ஜோதியே
3. தேவ சிங்கார வனத்தில் ஜீவ விருட்சம் பாவத்தை போக்கும் இரட்சகன் சாரோன் ரோஜாப்பூவே
4. பூலோக தாகந்தீர்த்தி டும் மேலாக நதியே காலாகாலம் மறைந்திருந்த ஞானமும் நீரே
5. சுவர்க்கத்தின் ஜோதி நாயகா என் திவ்யமிர்தமே என் ஆதியே என் அந்தமே என் ஜீவனும் நீரே