ஆணி கொண்ட உன் காயங்களை
aani konda un kaayangalai
ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் -2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2 ஆயனே என்னை மன்னியும் -2
வலது கரத்தின் காயமே -2 அழகு நிறைந்த ரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன்
இடது கரத்தின் காயமே -2 கடவுளின் திரு அன்புருவே அன்புடன் முத்தி செய்கின்றேன்
வலது பாதக் காயமே -2 பலன் மிகத் தரும் நற்கனியே இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே திருவிலாவின் காயமே -2 அருள் சொரிந்திடும் ஆலயமே