ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம்
aandavarin thottam azhagu malar koottam
ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம் ஆடிப்பாட நெஞ்சைத் தூண்டுது அன்பு பொங்கும் உள்ளம் அருள் வசந்த இல்லம் ஆண்டவரை புகழச் சொல்லுது
தேவ ஜீவனாக பிறந்திட ஜோதி ரூப கானம் முழங்கிட வையகமே வானகமே விண் ஒளிரும் விண்மீனினமே சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள்
ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள் நானிலமே நவமணியை கூறுங்கள் நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள்
மான் இனமே மீன் இனமே நில்லுங்கள் நீல மலை முடியே மனுக்குலமே கேளுங்கள் பறவைகளே பறவைகளே வாருங்கள் நம் பரமப்பிதா இறக்கத்தையே கூறுங்கள்