ஆண்டவரே வேண்டுதலை
aandavarae vendudhalai
1. ஆண்டவரே வேண்டுதலை அன்புடனே கேட்டிடுவீர் சென்ற பகல் முழுவதிலும் க்ஷேமமுடன் காத்தவரே
2.நன்றியுடன் பாடிடுவேன் தந்த பல நன்மைகட்காய் ஒன்று ஒன்றாய் எண்ணி எண்ணி உண்மையுடன் அஞ்சலிப்பேன்
3. சென்ற பகல் ஜீவியத்தில் கண்ட பிழை பொறுத்திடுவீர் இன்றிரவு வேளையிலும் இன்ப முகம் காட்டிடுவீர்
4. இயேசு பரன் பாதத்திலே இன்பமுடன் தலைசாய்த்து ஏற்றபடி இளைப்பாற்றும் எந்தனைக்கண் பார்த்திடுவீர் -2
5 சொப்பனமும் தப்பிதமாய் அப்பனே வராதபடி அற்பனைக் கண் பார்த்திடுவீர் ஆத்துமத்தைக் காத்திடுவீர்
6. நித்திரையில் யான் மரித்தால் கர்த்தனுந்தன் பதம் சேர்த்து நித்திய வாழ்வெனக்களிப்பீர் நித்தம் நன்மை மிகத் தருவீர்