ஆண்டவரே உம் சித்தம் என்ன
aandavarae um sitham enna
ஆண்டவரே உம் சித்தம் என்ன அர்ப்பணித்தேன் அதை செய்ய எந்தனின் சித்தம் போல் ஆகட்டுமே சித்தமே இன்பமே சித்தமே பாக்கியமே
1. பாடுகள் பட்டபோது காரணம் புரியவில்லை ஆறுதல் கண்டிட வேறிடம் போகவில்லை ஓர் அற்பூதம் செய்தீரை ஐயா. உம் நீதியை கண்மேன் ஐயா உம்மைப்போல தேவனை எங்கே நான் காணுவேன்
2. கெத்சமனே தோட்டத்தில் துயரத்தொனி கேட்கின்றதே சித்தமே ஆகட்டும் என் சித்தமே போகட்டும் உம்பாடுகள் கண்டேன் ஐயா உம் பாதை நான் சென்றேன் ஐயா நித்தம் என்னை தா ழ்த்தியே உத்தம னாய் வாழுவேன்.
3. சிலுவை மீதினிலே சுந்தரமான தேவரீ ர் சிங்கார ரூபனே மங்கி ஏன் தொங்கினீர் உம் நேசத்தை கண்டேன் ஐயா உம் பாசத்தை சொல்வேன் ஐயா சேர்ந்திடுவேன் சந்நிதி சியோன் மலை நிம்மதி
4. என் முன்னே செல்பவரே விண்பாதை ஜோதி நீரே என்னை நான் வெறுத்தே உம்மையே துதிப்பேன் கன்மலை போன்றவரே கைவிடா காவல் நீரே உம்மை விட்டால் பூமியில் என்னை மீட்க யாருண்டு ?