ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
aandavarae en aatralaay ullavarae
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே உமக்கே நான் அன்பு செய்கின்றேன் ( 2 ) அவரே என் கற்பாறை அரணும் மீட்பும் அவரே என் கேடயம் வலிமையும் துணையும் ( 2 )
என் துன்ப நாளில் பகைவர்கள் தாக்க என் அன்பு தேவன் அடைக்கலமானர் ( 2 ) நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார் . நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்
வலிமையைக் கச்சையாய் அணிந்தவர் அவரே வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே ( 2 ) எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க எந்நாளும் என் மீட்பர் புகழ்தனை பெறுக