ஆண்டவர் இயேசு வருகிறாரே
aandavar yesu varugiraarae
ஆண்டவர் இயேசு வருகிறாரே ஆயத்தமாகிடுவோம் மன்னாதி மன்னன் வருகிறாரே ஆயத்தமாகிடுவோம்
வருகிறார் வருகிறார் மணவாளன் இயேசு
1. வானத்தில் அடையாளம் தோன்றிடுதே எக்காள சத்தம் தொனித்திடுதே மன்னன் இயேசு மகிமையிலே மாந்தர் நம்மை அழைத்திடவே
2. மன்னன் இயேசுவின் முன்பாக மாந்தர் கால்கள் முடங்கிடுதே நாவுகள் யாவும் போற்றிடுதே கண்கள் யாவும் கண்டிடுதே
3. மணவாளன் இயேசு தாமே நம்மை சந்திக்க வருகிறாரே மணவாட்டி நீ ஆயத்தமா மணவாளனை சந்திக்கவே ஆத்துமாவே நீ ஆயத்தமா மணவாளனை சந்திக்கவே