ஆண்டவர் இயேசு வருகிறார்
aandavar yesu varugiraar
ஆண்டவர் இயேசு வருகின்றார்-தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார் வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்-மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
பாவத்தின் இருளைப் போக்கியவர்-பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர் பன்னிரு சீடரைக் காட்டியவர்-பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்
மறுபடி வருவேன் என்ற தெய்வம்-எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம் தனக்கென்ற வழியைக் காட்டியவர்-இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்
வேதத்தின் வார்த்தையில் பொருளானார்-நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார் பாக்கியம் பெற்றிட இவர் நாமம்-என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்