ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்
aandavar yesu vandhidum naal
ஆண்டவர் இயேசு வந்திடும் நாள் சீக்கிரம் நெருங்குதே அவர் வருகை நாளில் சேர்ந்திட நாமும் ஆயத்தமாவோமே -2
புத்தியுள்ள ஐந்து கன்னிகை போல நடந்திடுவோமே - நாமும் ஆவியின் எண்ணை குறைவுறாமல் காத்துக்கொள்வோமே -2
இயேசுவின் இரத்தத்தில் அங்கியை தோய்த்து எடுத்துக்கொள்வோமே நாமும் ஆவியின் முத்திரை மோதிரத்தை பெற்றுக்கொள்வோமே
சர்வாயுத வர்க்கங்கள் நாளும் அணிந்துகொள்வோமே - நம்மை எதிர்க்கும் சாத்தான் பாவம் விரட்டி ஜெயங்கொள்வோமே