ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி
aandaandu kaalamellaam nadathi
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர் இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா - 2 தண்ணீரையும், வெள்ளத்தையும் கடந்து வந்தோம் செழிப்புள்ள ஆசீர் எம்மேல் பொழியும் ஐயா - 2
1. புத்தம் புதிதான உள்ளத்தோடு உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா - 2 உண்மையாய் உமக்காக உழைத்திடவே உன்னத பெலத்தினை ஈந்திடுமையா - 2
2. ஏனோக்கு எலியாவை நடத்திச்சென்று மரணத்தை காணாது எடுத்துக்கொண்டீர் - 2 நண்பனாய் உம்மோடு நடந்திடவே வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா - 2
3. பரம எருசலேம் வாக்களித்தீர் வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா - 2 ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவே ஓயாத கிருபையை தந்திடும் ஐயா - 2
4. மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி, பிரகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே, பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா - 2