ஆனந்தங் கொண்டுள்ளந்தான்
aanandhang kondullandhaan
ஆனந்தங் கொண்டுள்ளந்தான் பொங்குதே - எந்தன் ஆத்தும நேசரவர் அன்பினால்
1. பாவங்களில் போன என்னை மேவி தேடினாரன்றோ சாபங்களில் நின்று என்னைத் தூக்கி விடுத்தாரன்றோ பாவியில் பெரும் படு பாவியாகுமென் பாவ தேவ கோபம் யாவும் நீக்கியே கை தாக்கியதால் - ஆன
2, கிறிஸ்துவையும் சேராமலே தூரமே நின்றேனன்றோ இஸ்ரவேலின் காணியாட்சி தூரமாய் நின்னதன்றோ வாக்குத்தத்தங்கள் யாவும் நீக்கியே நின்றேன் காணியாட்சி வாக்குத்தத்தம் கிறிஸ்துவுக்குள் என தாசி - ஆன
3. இயேசுவின் சுதந்திரமே எந்தன் பங்குமானதே இயேசுவின் சரீரத்தில் அவமானத்தால் தேவ ரகசியம் ஓகோ பெரிய பொக்கிஷம் தலைமுறை தலைமுறை மறைந்திருந்தும் வெளியானதால் - ஆன
4. காலங்கள் செல்ல செல்ல இயேசுவும் சமீபமே மேலானதை நாடி நாடி உள்ளமும் கதறுதே இயேசுவே வாரும் என்னை பாசமாக சேரும் ஆசையோடு நேசரையே பார்த்து பார்த்து வாஞ்சிக்கிறேன் - ஆன
5. மேகமீதில் இயேசு வெகு வேகமாக வருகிறார் கூட்டங்கள் என்னிடம் எந்தன் சுத்தரை என்பார் மண்ணின் சாயல் பொய் மெய் விண்ணின் சாயலாம் விண் சரீரம் சொந்தமாக்கி விண்டலம் பறந்து போவேன் - ஆன