ஆனந்தமே ஆனந்தமே
aanandhamae aanandhamae
ஆனந்தமே ஆனந்தமே அன்பரேசென் அன்பரானார் ஆனந்தமே
1. நேச சுவிசேஷம் கொண்டு நெஞ்சதனிலே பதித்தார் நீசன் பெரும் பாசங்கண்டு பாதம் தாழ்ந்தேன் தோஷம் கொடும் நாசமென்னும் தீயகுணம் யாவும் நீக்கி யேசையன் இழுத்துக்கொண்டார் ஆனந்தமே
2. பாவபாரம் நீக்கிப் பரமானந்தத்தைப் பரனீந்தார் தேவகோபம் நீக்கி நித்திய ஜீவனுமீந்தார் ஜீவ ஆவி ஈந்து சுத்தஜீவியமும் செய்யச் செய்தார் காவலன் கருணைசெய்தார் ஆனந்தமே
3. புறஜாதி மத்தியில் நல் ஜீவசாட்சியாக வைத்தார் திறமுடன் தேவசுதன் மகிமையுற்றார் கரங்கொண்டு இடறாது கண்மணிபோல் காத்துவந்தார். பரமேறும் பாக்கியம் தந்தார் ஆனந்தமே
4. போதனைகள் யாவையுமே புனிதனின் கிருபையால் சாதனை செய்திடவே நல் சக்தியும் ஈந்தார் சோதனைகள் சூழும்போது சோர்ந்திடாது காத்து வந்தார் நாதனைநான் ஸ்தோத்திரிப்பேன் ஆனந்தமே
5.அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன் அல்லும் பகலும் அவர்க்கு துத்தியம் செய்வேன் நல்மகிபர் என்னைச்சேர்க்க சீக்கிரமே வருவதால் அல்லேலூயா பாடிடுவேன் ஆனந்தமே