ஆனந்தமே ஆனந்தமே
aanandhamae aanandhamae
ஆனந்தமே ஆனந்தமே ஆண்டவர் சமூகம் பேரின்பமே அன்பின் பிதாவீட்டில் ஆறுதலே என்று சேர்ந்திடுவேன் இயேசுவிடம் என் இளைப்பாறுதல் பெற்றிடுவேன்
பூவில் பரதேசியாய் ஜீவிப்பேன் பாரில் அந்நியனாக நடப்பேன் என் சுயதேசம் சேரும் வரை என் யாத்திரை சிலுவை பாதையாகும்
இந்தப் புவி எந்தன் சொந்தமில்லை இங்கே என் மனமோ தங்கவில்லை என் எண்ணமெல்லாம் மேலோகமே எப்போது அழைப்பு வந்திடுமோ
பூலோக கூடாரம் அழிந்திடுமே பாரம் சுமந்து தவிக்கின்றேனே கைவேலையல்லாநித்யவீடே கண்டு களிப்பேன் விண் மாளிகையே
புது எருசலேம் அலங்காரமே பன்னிரெண்டு கற்கள் ஜொலிக்குமே பொற்தள விதி மின்னிடுமே பளிங்குந்தியும் பாய்ந்திடுமே
நீதியின் சூரியன் தோன்றிடுவார் நித்திய ஜீவனும் நல்கிடுவார் நீடுழி அங்கே வாழ்ந்திடவே நித்திய வீட்டிற்குச் செல்லுகிறேன