ஆனந்தமாய் வானவன் பாதம்
aanandhamaay vaanavan paadham
ஆனந்தமாய் வானவன் பாதம் பாடி மகிழ்வோம் அனைவரும் தானங்களை தந்த நல் இயேசு நாதனைப் புகழ்வோம்
1. அன்புடன் பணிவோம் - அன்பரை கன்மலையை கனிவுடன் நினைந்து பாடிடுவோம் நன்னயம் நவ வரங்கள் நமக்கருளிய தால் - துதித்து - ஆன
2. கரங்களை விரித்து - சுத்த நரரூபம் ஆனவனே நண்பருக்கிரங்கி தரவேணும் ஆசைகளை மைந்தர் மகிழவே - துதித்து - ஆன
3. நித்திய மகிமை - விண்ணிலே புத்திரர்க்குப் புதுமையாகப் புண்ணயனருளி நித்தமுமே முக்தியிலே பக்தரை அணைப்பார் - துதித்து - ஆன
4. என்ன மகிமையே - இன்பமே அன்னை தந்தை யாவரும் அரியவின்பமிதே உன்னதனே உமதடியை உணர்ந்து பாடிடுவோம் - துடித்து - ஆன
5. கர்த்தனைப் புகழ - கருணை சக்தியுள்ள நாவிருந்தால் எத்தனை மகிமை அத்தனுமை அனுதினமும் பாடுவதினிமை - துதித்து - ஆன்
6. உப்பரிகையில் - சாலேமின் தற்பரன் சாயலுடன் நின்றிலங்கிடுவோம் முத்துக்களின் வாசலில் சுற்றி ஏகிடுவேன் - துதித்து - ஆன