ஆனந்தமாய் பாடுங்கள்
aanandhamaay paadungal
ஆனந்தமாய் பாடுங்கள் அற்புத அற்புதமான சகல சிருஷ்டிகளே யாவும் பணிந்து - அகில சிருஷ்டிகரை
1. சென்ற காலம் - ஜெயத்தொனியுடனே எங்கும் ஜொலித்தார் ஏழைகட்கு மாபெலன் சொரிந்தார் . ஏத்தியே ஸ்தோத்திரிப்போம் - எந்நாளும் இயேசு மகிபனையே. - ஆன
2. போகையிலும் - வருகையிலும் எம் தோழனா மவனே போதனை அளித்து போம் வழி கொடுத்து போஷித்த எம் துரை - நாம் துதிப்போம் இயேசு மகிபனையே - ஆன
3. ஆறுதலும் - ஆதரவு எம் ஆன்ம நாயகன் ஆசைக்கிசைந்து வேண்டுதற்கிரங்கி யாவையுமே அளித்தார் - நாம் துதிப்போம் இயேசு மகிபனையே - ஆன
4. வந்திடுவார் - வாஞ்சைகள் தீர வானத்திலெமக்காய் வாழ்த்துவோமே நாம் அன்பரின் துதியை வல்லவர் தேவனென்று - ஆர்பரிப்பாய் இயேசு மகிபனையே - ஆன
5. காலா காலம் - கர்த்தரின் முகம் கண்டிடும் கிருபை காதலனளித்தார் காத்திராதெமக்குக் கனிவுடன் துதிப்போம் - எந்நாளும் இயேசு மகிபனையே - ஆன