ஆனந்தம் கொண்டு
aanandham kondu
ஆனந்தம் கொண்டு அகமகிழ்வேனே அன்பரைப் பாடிடுவேன்
அவர் அன்பின் பாதத்தை அனுதினம் தேடி ஆவியில் நிறைந்திடுவோம் - ஆன
1. பாவத்தில் மாண்ட பாவிகளெம்மைப் பரிவுடன் இரட்சித்தாரே - அவர் கிருபையை நாடி ஓடிவா பாவி உன்னையும் இரட்சிப்பாரே - ஆன
2. சுத்த ஜீவியம் கொடுத்திட இயேசு சிலுவையில் மரித்தார் - அவர் சுத்த ரத்தம் சுத்திகரிக்கும் பாவத்தை முற்றுமாக - ஆன்
3. தேவன் புல் வளர தேவன் தந்தார் தேவன் கிருபையின் - அவர் கிருபையை நாடி ஓடியே வந்து ஆவியைப் பெற்றிடுமேன் - ஆன
4. துக்கமில்லை துன்பமில்லை இயேசுவின் தொண்டருக்கு - அவர் எல்லாவற்றிற்கும் எல்லாம் இருந்து ஆற்றிய தேற்றிடுவார் - ஆன்