ஆனந்தம் ஆனந்தமே
aanandham aanandhamae
ஆனந்தம் ஆனந்தமே தேவ ஆவியில் ஆனந்தமே ஞானம் தரும் நலம் யாவும் தரும் அவர் நல்லுறவில் ஆனந்தமே
வாய்மை தரும் அருள் தரும் அவர் வரம் தரும் வாழ்வினில் ஆனந்தமே உயிர் அளிக்கும் உயர் வாழ்வளிக்கும் அவர் உன்னத உறவில் ஆனந்தமே
ஏற்றம் தரும் மன மாற்றம் அவர் ஆற்றலைப் பெறுவோர்க் கானந்தமே நோய் தீர்க்கும் பிணி தீர்க்கும் அந்த தேவனின் உறவில் ஆனந்தமே