ஆனந்தம் ஆனந்தம் மா ஆனந்தம் ஆனந்தமே
aanandham aanandham maa aanandham aanandhamae
1. ஆனந்தம்! ஆனந்தமே, மா ஆனந்தம்! ஆனந்தமே பேரானந்தம்! ஆனந்தமே, மோட்சானந்தம்! ஆனந்தமே
மணியாரமலன் அணியாரருளால் மனமகிழ்ந்தினமிதிலே
2. அனுதின ஆகாரமும் - எனக்கினிய நற்சீருடையும் - தினம் ஆத்ம உடல் சுகமும் நான் அடைந்திட திரள்தந்ததால் மணி
3. காசினியில் நான் வாழ் - என்னாயுசு காலமெல்லாம் - வன் தோஷிமா பாவியென்னில் -பல மாசுகளகற்றியதால்
4. நித்திய ஜீவனுடன் - ஓர் பொற்றள ராஜ்ஜியமும் - நம் கர்த்தரின் கிருபையினால் தரச் சத்திய வாக்களித்தார்