ஆனந்தம் ஆனந்தம்
aanandham aanandham
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே - அதி சந்தோஷமே இது சந்தோஷமே
தந்தை தாயோனோரும் சொந்தமானவர்கள் தந்திடாத பரமானந்தமே - ஆன்
1. எப்போதும் சந்தோஷம் சந்தோஷமே - இது ஒப்பில்லாத பரமானந்தமே அந்நியர்களும் ஏகமானோரையும் ஒன்றாகச் சேர்க்கின்ற தானந்தமே - ஆன்
2, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்டெடுத்த - மக்கள் ஆனந்தங் கொண்டிங்கு பாடுகிறார் இப் பூவிலுள்ளதை ஒப்பிடிலொவ்வாத ஆனந்தங் கொண்டவர் பாடுகிறார் - ஆன்
3. இப்பூவி லானந்தம் இவ்விதமுண்டெனில் சொர்க்கத்தின் ஆனந்தம் சொல்லலாமோ என் ஆத்துமாவே நீ காண்பாயே வேகத்தில் ஆனந்தக் கூட்டத்தை மோட்சத்திலே - ஆன்
4. மண்ணான சரீரம் மாறிடும் நேரத்தில் விண் சரீரம் நமக்கீந்திடுவார் சற்று நேர மின்னும் தாமதித்திடுகில் பொன் நேசரை முத்தம் செய்திடலாம் - ஆன்
5. இப்போது காணாமல் நேசிப்பது என்றால் சீக்கிரம் சென்று நீ கண்டிடுவாய் அப்போது என் நேசரின் காயங்களும் கண்டு ஒவ்வொன்றாய் முத்தங்கள் செய்திடலாம் - ஆன்