ஆனந்தபாடல்கள் பாடிடுவேன்
aanandhabaadalgal paadiduven
ஆனந்தபாடல்கள் பாடிடுவேன் எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்துடுவேன் அலைச்சல்கள் யாவையும் அகல செய்தே-நல்ல மேய்சலில் எந்தனை மகிழச் செய்தார்
1. மேலோக நாடேந்தன் சொந்தமிதே இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே -2 மாலையில் மனமினி வைத்திடாமல் -2 நேச காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்-2
2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே-2 பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே-2 பாரினில் வெற்றி என்னை சிறக்கச் செய்தார்-2
3. அற்புதமாம் அவர் நேசமது எந்தன் பொற்பரன் சேவையின் பாக்யமது-2 பற்பல கிருபைகள் பகருகின்றார்-2 ஏழை கற்புடன் அவர் பணி செய்திடவே-2
4. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – அங்கு தூதரின் தொனி காதில் கேட்கின்றதே-2 காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்-2 விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்-2
5. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர்- தம் அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்-2 உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன்-2 அங்கு பிழைத்திடவே அன்பர் சமூகமதில்-2
6. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள-தேவன் என் பிதா ஆனதால் ஆனந்தமே-2 ஏறெடுப்போம் நம் இதயமதை-2 என்றும் மாறாமல் பதில் தரும் மன்னனிடம்-2
7. கானானின் கரையிதோ காண்கின்றதே - எந்தன் நாதரின் தொனி காதில் கேட்கின்றதே காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம் விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்