ஆனந்த நாளில் இயேசு
aanandha naalil yesu
ஆனந்த நாளில் இயேசு வருவார் ஆர்ப்பரிப்புடன் தூதர்கள் சூழ எக்காளம் தொனிக்க வானங்களை முழங்க ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன்
1. கண்ணிமைக்கும் நேரத்திலே கன்னிகையும் சுத்த சபையே விண்ணில் பறந்திடும் இயேசுவுடன் விண் வீட்டில் மகிழ்ந்திடவே - ஆனந்த
2. மண்ணில் உறங்கிடும் சித்தர் மண்ணின் சாயலை களைந்தே விண்ணின் மகிமை அணிந்தவராய் இணைவாரே மணவாட்டியாய் - ஆனந்த
3. இன்னல்கள் யாவையும் வென்றே கண் விழிப்புடன் நிற்கும் கண்மணியாம் திருச்சபைக்காக மின்னல் போல் தோன்றிடுவார் - ஆனந்த
4. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை தொடர்வோம் உன்னத தேவன் விருதினை வென்றிட நாம் விரைவோம் - ஆனந்த
5. விண்ணதின் ராஜாவாம் இயேசு சொன்ன வண்ணம் வருவார் திண்ணமாய் சீயோனில் சேர்த்துவிடுவார் என்றும் தம்மோடாளவே - ஆனந்த