ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
aanandha geedhangal paadungal
ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் - சாபங்கள் - நீக்கவே அன்னையின் மைந்தனாய் - தாழ்மையாய் - தோன்றினார்
1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2) வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)
2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு - தோன்றினார்(2) சாலேமின் ராஜனிவர் - மகிழ்ந்து கண் தூங்கிடவே ஜீவனோர் தொட்டில் இல்லை மாடடையும் கொட்டில் உண்டு (2)