ஆள் இல்லை ஆள் இல்லை
aal illai aal illai
ஆள் இல்லை ஆள் இல்லை அழுது ஜெபிக்க ஆள் இல்லை செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார் கண்ணீர் சிந்த ஆள் இல்லை-2
சின்னஞ்சிறு வரை சித்திரவதை செய்து வதைக்கும் கூட்டம் உண்டு கதறித் துடிக்கும் பாலகர்காக கண்ணீர் வடிக்க ஆள் இல்லை-ஆள் இல்லை
குடித்து வெறித்து அடித்து உதைக்கும் கொடூர கூட்டம் உண்டு அழுதே வாழ்க்கை கழிப்போர்க்காக அழுது புலம்ப ஆள் இல்லை-2
திருடப்பட்டோர் விற்கப்பட்டோர் தினமும் புலம்புகின்றனர் சிறை வாழ்வாலே சிதைத்தோர் மீள அறையில் ஜெபிக்க ஆள் இல்லை-2
கொடுமை புரிவோர் தீமை செய்வோர் மனம் திரும்ப வில்லை கண்ணீர் அவரை மாற்றும் என்றும் அறிந்தும் ஜெபிக்க ஆள் இல்லை-2
தேவன் வருவார் கணக்கு கேட்பார் எப்படி ஜெபித்தாய் என்பார் என்ன சொல்ல ? எப்படி சொல்ல? தலை குனிவோர் ஏராளம்-2