ஆகாய முகிலின் மீதினில்
aagaaya mugilin meedhinil
1. ஆகாய முகிலின் மீதினில் தோன்றுவார் ஆர்ப்பரிப்புடன் தூதர்கள் சூழவே ஆவலாய் அவரைக்காய் காத்திருந்தோருக்காய் ஆதரயே நோக்கி இயேசு இறங்கி வருவார்
நினையா நேரந்திலே நித்தியர் இயேசு வருவார் நித்திரை விட்டு எழும்பும் நேரமாயிற்று நீதியின் ஆயுதங்கள் தரித்து இருப்போம்
2. தூளில் தூங்கிடும் தூயவர் துரிதம் துன்பங்கள் துறந்தே மண்ணினின் றெழும்ப ஜீவனோடிருக்கும் தேவனின் சுதரே சோதிமயமாகி விண்ணில் பறந்த செல்லுவார் - நினை
3. மண்ணின் மகிமையும் தம்மானமேவையும் அண்ணல் இயேசுவுக்காய் இந்நிலம் வெறுத்தார் கண் இமை பொழுதில் சேரவே அவரை கண்ணீரெல்லாம் கர்த்தர் தாமே கரத்தால் துடைப்பார் - நிலை
4. அப்போஸ்தலரவர் அஸ்திபாரத்தின் மேல் செப்பமாய் அமைந்தே சீர்பெற வளர்ந்தோர் இப்புவியதினின் றுயர்த்தி நித்தியம் தப்பிடாது தம்முடனே இருத்த வருவார் - நினை
5. மகாமகிமையாம் சீயோன் சாலேமையும் வேகா வேகமுடன் ஏகமாய் அடைந்தே யுகா யுகங்களாய் இணைந்தவரே முகாமுகமாகக் கண்டு சேவையே புரிவோம் - நினை