ஆகாரின் தேவன் என்னை பெயர்
aagaarin devan ennai peyar
ஆகாரின் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார் தனிமையின் வேளையிலும் கூடவே நடந்தார் கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக்கி தீர்த்தார் என் வறண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்
கதறி அழுத நேரம் தம் கரத்தை நீட்டி தூக்கி என் கண்ணீர் துடைத்தார் என் கண்ணீர் துடைத்தார் என் கதறலைக் கேட்டார் என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்
எதிர்காலம் இல்லையென நான் என் மனதிற்குள்ளே நினைத்திருந்த அந்த வேளையில் புது வழிகளைக் காட்டி புது வாழ்வும் கொடுத்தார் நான் நினையாத இடத்தில் வைத்தார் என்னை எட்டாத இடத்தில் வைத்தார்