ஆகாது என்று தள்ளின
aagaadhu endru thallina
ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) கர்த்தராலே உண்டாயிற்று கண்களுக்கு ஆச்சரியமே-(2)
அன்னாளின் அழுகுரல் கேட்டவர் உந்தனின் அழுகுரல் கேட்டிடுவார் அன்னாளுக்கு சாமுவேல் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)
எஸ்தரின் விண்ணப்பம் கேட்டவர் உந்தனின் விண்ணப்பம் கேட்டிடுவார் ஆமானின் சதிதிட்டம் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)
சகேயுவின் ஏக்கத்தை அறிந்தவர் உந்தனின் ஏக்கத்தை அறிந்திடுவார் சகேயுவை அழைத்து இரட்சித்தவர் உன்னையும் இரட்சித்து உயர்த்திடுவார் - (2)