ஆடிப் பாடி உம்மை
aadip paadi ummai
ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன் ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2)
ஆராதனை உமக்கே (8)
1.செங்கடல் எதிரிட்டாலும் பாதைகள் அடைப்பட்டாலும் (2) சேனைகளின் கர்த்தரே (புது) வழியை திறந்திடுவார் (2)
ஜெயம் என்றும் நமக்கே (4)
2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2) பலத்தால் என்னை நிரப்பி வழியை செவ்வையாக்குவார் (2)
3.போராட்ட வேலைகளிலும் நிந்தைகள் சூழ்ந்த போதும் (2) எக்காளத்தை எடுத்து எரிகோவை தகர்த்திடுவேன் துதியின் சத்தம் உயர்த்தி எரிகோவை தகர்த்திடுவேன்