ஆதியும் நீரே அந்தமும் நீரே
aadhiyum neerae andhamum neerae
பல்லவி
ஆதியும் நீரே அந்தமும் நீரே பாடிடுவேன் உம்மையே பாடிடுவேன் உம்மையே - நாளும்
அனுதினம் உம்மைப் பாடும் நல்வரம் வேண்டும் இறைவா உம் பாதம் தினம் தொழ வேண்டும் ஒப்புவிக்கிறேன் என்னை உமக்கென்று தேவா ஏற்று வழி நடத்தும் என் ஜீவ நாதா ஒப்புவிக்கிறேன் என்னை உமக்கென்று தேவா ஏற்று வழி நடத்தும் என் ஜீவ நாதா
பல்லவி
ஆதியும் நீரே அந்தமும் நீரே பாடிடுவேன் உம்மையே பாடிடுவேன் உம்மையே - நாளும்
ஜெபத்தின் வல்லமையை உணர்ந்திட்ட போதே அழுதேன் எனக்காக பாவக்கறை நீங்க எத்தனை பெரிதாமோ உமது கிருபை என்னையும் உம்மோடு சேர்த்துக் கொள்ளும் தேவா
பல்லவி
ஆதியும் நீரே அந்தமும் நீரே பாடிடுவேன் உம்மையே பாடிடுவேன் உம்மையே - நாளும்