ஆதியும் அந்தமும் ஆனவரே
aadhiyum andhamum aanavarae
ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகா நீரே ஆதியில் ஜலத்தின் மேல் அசைவாடினார் இன்றும் அசைவாடுமே - தேசத்தின் மேல்
ஆவியானவரே தூய ஆவியானவரே
ஒழுங்கற்ற பூமியின் மேல் அசைவாடினீர் ஒழுங்கு படுத்தினீரே.. இன்று ஒழுங்கற்ற தேசத்தின் மேல் அசைவாடுமே ஒழுங்கு படுத்திடுமே
இருளடைந்த பூமியின் மேல் அசைவாடினீர் வெளிச்சம் தந்தீரையா பாவ இருளடைந்த தேசத்ததின் மேல் அசைவாடுமே வெளிச்சம் தந்திடுமே
அன்று சாலொமோனின் மண்டபத்தில் அசைவாடினீர் மகிமை விளங்கினதே இன்று வெறுமையான என் உள்ளத்தில் அசைவாடுமே ஜீவன் தந்திடுமே