ஆதியின் அன்பினையே
aadhiyin anbinaiyae
ஆதியின் அன்பினை யே வா ழ்வினில் மறந்தேனே துரோகங்கள் புரிந்தேனே , தோல்விகள் அடைந்தேனே – நான்
1. என் சகோதரியே பிரியமே புறாவே உத்தமியே திறப்பாய் வெண்பனித் தூரலில் என் தலை நனைய வெகு நேரம் நிற்கின்றேன்
2. எங்கே என் நேசர் என்றே அழுது இன்று அலைகிறேன் இதயக் கதவைத் திறவென்று கெஞ்சினார் அன்றோ ஏற்க மறுத்தேன்
3. என் உள்ளம் பொங்க கதவைத் திறந்தேன் அங்கே அவரில்லையே அன்பான மொழியில் அவர் சொன்னவாக்கால் ஆத்துமா சோர்வுற்றதே
4. எருசலை மகளிர் பதினாயிரங்களில் சிறந்த என் நேசரையே ஒரு வேளை கண்டால் தூதொன்றை உரைப்பீர் நேசத்தால் சோகமடைந்தேன்
5. மதுரமாய் பேசும் இவரே என் நேசர் முற்றிலும் அழகுள்ளவர் மங்கின திரியை அணையாமல் தூண்டும் மகிமையின் மணவாளன்.