ஆதியே அந்தமே
aadhiyae andhamae
பல்லவி
ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே − 2 ஒருவராய் பெரிய அதிசயம் செய்யும் உன்னத தேவனே − 2
பல்லவி
நீர் இராஜா இராஜாதி இராஜா நீர் ரோஜா சாரோனின் ரோஜா − 2 ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் பள்ளத்தாக்கின் லீலியே − 2
ஜெபத்தைக் கேட்பவரே எங்களுக்கு ஜெயத்தைத் தருபவரே விண்ணப்பத்தைக் கேட்பவரே எங்களது கண்ணீரைக் காண்பவரே நல்லவரே வல்லவரே உயர்ந்தவரே பெரியவரே
பூமியில் உயர்ந்தவரே ஜாதிகளில் உயர்ந்தவரே − 2
பல்லவி
நீர் இராஜா இராஜாதி இராஜா − 2
கூப்பிடும் வேளையிலே எங்களுக்குப் பதிலை தருபவரே ஆபத்துக் காலத்திலே எங்களது அருகினில் வருபவரே யெகோவாயீரே சகாயரே எஜமானனே என் இயேசுவே
கரம் பற்றி நடத்துவீரே காருண்யத்தால் உயர்த்துவீரே − 2
பல்லவி
நீர் இராஜா இராஜாதி இராஜா − 2
அன்று உள்ள தேவைகளை எங்களுக்கு அனுதினம் தருபவரே ஆதரவாயிருந்து எங்களது ஆத்துமா தேற்றுவீரே கன்மலையே காண்பவரே ஜீவநதியே தேவஆவியே
புல்வெளியில் மேய்ப்பவரே தாகத்தைத் தீர்ப்பவரே − 2