ஆதிபரன் இயேசுவைப்
aadhibaran yesuvaip
ஆதிபரன் இயேசுவைப் பார் அதி ரூபமானவரின் திருமுகத்தை பார்
1. ஜோதியே வருணா துலங்கிய கருணா நீதி நெறி தவறாத நிர்மல நாதா - ஆதி
2. தினமுமன்றாடி துதிகளைப் பாடி இன்பமுற ஜீவியத்தை இகமதில் நாடி - ஆதி
3. காலையில் எழுந்து கர்த்தரை பணிந்து கருணையுள்ள காதலனை கனிவுடன் குனிந்து - ஆதி
4. பரகதி துறந்து பாரினில் பிறந்து நாரதர் வேடம் பூண்ட இயேசு நாதனை புகழ்ந்து - ஆதி
5. அமரர்கள் போற்றும் அழகுள்ள கோமான் அருள் பெற்றோர் அனுதினம் தரிசிக்கும் அதிரூபன் - ஆதி