ஆதி சுதன் மனுவானார்
aadhi sudhan manuvaanaar
ஆதி சுதன் மனுவானார் - அதிசயம் அல்லேலூயா கீதம் பாடிடுவோம்
1. விண்ணவர் துதி சாற்ற மண்ணுலகோர் மகிழ்ந்து கொண்டாட உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை உள்ளம் கனிந்து சாற்றிடுவோம்
2. மேசியா இவர்தானோ! நம்மை மேய்க்க வந்த நரர் கோனேர் நேசமேயுருவாய்ப் பாசங் கொண்ட - நல் நாதனை நாம் போற்றிடுவோம் - ஆதி
3. அல்லல்கள் யாவும் தொலைக்க வல்ல பேயையும் நோயையும் ஜெயிக்க ஆயர் குடில் தனி அங்கம் எடுத்ததால் துங்க பரனையே வாழ்த்துவோமே - ஆதி
4. இத்தினமதில் நாம் கூடி இன்னிசை பாலகனையே வாழ்த்தி பெத்லகேம் நகர் சத்திர முதித்த ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் - ஆதி
5. சுந்தர வடிவம் மைந்தன் கந்தை அணிந்தார் இது விந்தை வந்தனம் துதி இன்றும் சாற்றுவோம் சந்ததம் அவர்க்கென்றென்றுமே - ஆதி