ஆதி பராபரனின் சுதனே
aadhi paraabaranin sudhanae
1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா - இந்த அறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் - யேசுநாதா
2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் - யேசு நாதா இந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ - யேசு நாதா
3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே - யேசுநாதா மன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ - யேசு நாதா
4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே - யேசுநாதா அவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் - யேசுநாதா
5. அன்புமிகும் வல்ல ஆண்டவரே கிறிஸ்து - யேசுநாதா இனி ஆகாதோனாய்க் காணேன் ஆணைகள் செய்கின்றேன் - யேசுநாதா
6. மற்றவர் குற்றத்தை யாமும் மன்னித்திட - யேசுநாதா நல்ல வாஞ்சையளித்து வரங்கள் புரிந்தருள் - யேசுநாதா
7. பரதேசிகளெம்மை அரவணையும் கிறிஸ்து - யேசுநாதா திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் கிறிஸ்து - யேசு நாதா