ஆதி அப்போஸ்தல
aadhi apposthala
1. ஆதி அப்போஸ்தல நாட்களைப்போல - தேவா மேதினி மீதினில் உம்மாவியை ஊற்றியே உள்ளங்கள் உயிர்பெற உன்னத இந்நேரம் வந்திடுவீர்
வந்திடுவீர் தேவா வந்திடுவீர் வல்லமையால் நிறைக்க - இவ்வேளை ஆவியின் கனியும் வரங்களும் ஜொலிக்க செய்திடுவீர்
2. அக்கினி நதியாய் பாய்ந்திடுவேன் - இன்றே போக்கிட என் மாசுகளும் ஆக்கிட உம் திரு தூயவனாய் தக்கதோர் வல்லமை தந்திடுவீர் - வந்தி
3. அந்திய நாட்களில் என் ஆவியை - எல்லா சந்ததி மீதினில் பகருவேன் என்று வாக்குத்தத்தம் அளித்தீரே இன்று அதை நிறைவேற்றுவீர் - வந்தி
4. தேகமிக்கூடாரம் களைந்திட்ட - நானும் வேகம் உந்தன் இருப்பேன் ஏகமாய் உம் திரு சாயலதாய் ஆகவே தாரும் பின்மாரியினை - வந்தி
5. சீயோன் எருசலேம் ஆயத்தமா? - தேவா சீக்கிரம் சேர்த்திட வந்திடீரோ ? பார்த்து பார்த்து என் கண்கள் இதோ சோர்ந்திடாதே தீரா வாஞ்சையினால் - வந்தி