ஆதவன் உதிக்கு முன் எழுவீர் - நம்
aadhavan udhikku mun ezhuveer - nam
ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் - நம் ஆண்டவன் தோன்றிவிட்டார் - இயேசு ஆண்டவன் தோன்றிவிட்டார் காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில் கர்த்தர் தோன்றிவிட்டார் - நம் கர்த்தர் தோன்றிவிட்டார்
1. புனிதமாமரி புண்ணியவதியின் புதல்வனாக பூமியில் தோன்றி கல்லிடை ஓரத்தில் கடுங்குளிர் சாரலில் கந்தையின் நடுவினிலே - நம் கர்த்தர் தோன்றிவிட்டார்
2. யூதே நாட்டின் சந்ததியாக சூசையப்பரின் சுந்தர மகனாய் சுத்த மரியிடம் மனித குலத்திலே தேவன் தோன்றிவிட்டார் - இயேசு பாவ மன்னிப்பு தருகின்ற தேவன் பகலும் இரவாய் திகழ்கின்ற தேவன் காற்றாய் மழையாய் கடலாய் அலையாய் ஊற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய் உத்தமர் தோன்றிவிட்டார் - இயேசு உத்தமர் தோன்றிவிட்டார்